திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (09:03 IST)

உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரம் தமிழகர்கள்! – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஆயிரம் தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ள தமிழக திமுக எம்.பி அப்துல்லா, உக்ரைனில் மருத்துவம், பொறியியல் படிக்க சென்ற மாணவர்கள், பணிக்கு சென்றவர்கள் என சுமார் ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கென அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.