செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (08:47 IST)

பஞ்சாபில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! – ஆட்சியை பிடிப்பது யார்?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி என பலமுனை போட்டி நடைபெறுவதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் உள்ளன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறும் நிலையில் மக்கள் ஆர்வமாக தங்கள் வாக்குகளை செலுத்தத் தொடங்கியுள்ளனர்.