வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : வெள்ளி, 5 டிசம்பர் 2025 (14:06 IST)

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..
கடந்த இரண்டு நாட்களாகவே திருப்பரங்குன்றம்ல் கோவிலின் மலை குன்றில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை என்று கூறி பாஜகவினரும், இந்து முன்னணி கட்சியினரை சேர்ந்தவர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி அந்த இடத்தில் தீபம் ஏற்றக் கூடாது. ஆனால் இவர்கள் வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார்கள். எனவே அனுமதி தர முடியாது.  எனக்கூறி தமிழக காவல்துறையினர் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்து முன்னணி கட்சியினருக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தார். ஆனாலும் தமிழக காவல்துறை இந்து முன்னணி கட்சியை நிறை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. அதன்பின் இரண்டு நீதிபகள் கொண்ட தீர்ப்பும் ஜி.ஆர் சுவாமிநாதனின் கருத்தை உறுதி செய்ய நேற்று இரவு இந்து முன்னணி கட்சியினர் கோவிலுக்கு தீபம் ஏற்ற சென்றனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் இது தொடர்பாக திமுக தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுபற்றி பல அரசியல் கருத்து தலைவர்களும் கருத்து சொல்லிவிட்டனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை. வழக்கமாக தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிடும் விஜய் இது பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

இதையடுத்து இதுபற்றி விஜய் தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் மக்களின் நம்பிக்கை இழப்பார் என சமூகவலைத்தளங்கலில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.