3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு

Last Modified செவ்வாய், 3 டிசம்பர் 2019 (06:59 IST)
மழை பெய்து விட்டாலே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அழைக்கப்பட்டு வருவது கடந்த சில நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது
அந்தவகையில் கடந்த வெள்ளி முதல் நேற்று வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று இயங்கும் என்பது உறுதியாகி உள்ளது
ஆனால் அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்னும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

முதல்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் இம்மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் இந்த மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன்அறிவித்துள்ளனர் இருப்பினும் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :