”அந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யகூடும்”… வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, புதுச்சேரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், தேனி, புதுச்சேரி, திண்டுக்கல், கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.