விடுமுறை மாவட்டங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது தெரிந்ததே. குறிப்பாக சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி நவம்பர் 30 முதல் மிக அதிகமான கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன. நேற்று மாலை தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் புதுவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை எனஅறிவிப்புகள் வெளிவந்தன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இன்று காலை மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுவரை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிப்பு வெளிவந்தூள்ளது என்பதை தற்போது பார்ப்போம்
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
1. சென்னை
2. தூத்துகுடி
3. திருவள்ளூர்
4. காஞ்சிபுரம்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
1. கடலூர்
2. செங்கல்பட்டு
3. ராமநாதபுரம்
4. ராணிப்பேட்டை
5. நாகப்பட்டினம்
மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்