திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:54 IST)

இந்த மூன்று மாவட்டங்களில்தான் இப்போது கொரோனா அதிகம் – கவலையளிக்கும் புள்ளிவிவரம்!

தமிழகத்தில் சென்னை தவிர்த்து சேலம், கோவை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே உள்ளது.

தமிழகத்தில் தினசரி தோராயமாக 6000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஆரம்பம் முதலே சென்னை முதல் இடத்தில் இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் இருந்து சேலம், கோவை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்து இப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் இம்மாதம் ஒன்றாம் தேதி இருந்த நோயாளிகளின் எண்ணிக்கையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எண்ணிக்கையில் இப்போது கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு இந்த மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.