திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:38 IST)

பிரேசிலை கொரோனாவிலிருந்து காக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பிரேசிலில் இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மட்டும் 35 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகள் உள்ளதால் இடப்பற்றாக்குறயால் பலருக்கு சிகிச்சை கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அவர்களது இடத்திற்கே சென்று கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ஒருவர். இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் பெர்னாண்டோ என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரேசிலில் உள்ள மருத்துவ தட்டுப்பாட்டை உணர்ந்த இவர் பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிகிச்சைகள் அளித்து வருகிறார்.