திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (10:41 IST)

சென்னை கல்லூரியில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் பணியிடமாற்றம்

சென்னை அருகே உள்ள கல்லூரி உள்பட 3 கல்லூரிகளில் ஜாதி பாகுபாடு காட்டிய மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாகியுள்ளன. 
 
நாங்குநேரி பள்ளியில் ஜாதி பிரச்சனை மிகப்பெரிய அளவில் பெரிதான நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஜாதிய ரீதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி  உள்ள கல்லூரி உள்பட 3 கல்லூரிகளில்  ஜாதி பாகுபாடு காட்டியதாக மூன்று பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து மூன்று பேராசிரியர்களையும் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்லூரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை வியாசர்பாடி கல்லூரியில்  பணிபுரிந்த பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி ஆசிரியர் பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
 
Edited by Mahendran