வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:12 IST)

சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரி பட்டாசு வீசப்பட்ட விவகாரம்: 10 மாணவர்கள் கைது..!

சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பட்டாசு வீசப்பட்ட விவகாரத்தில் பட்டாசு வெடி வீசிய வழக்கில் 10 மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இளங்கலை 2 ஆம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், தகராறு காரணமாக ஒரு பிரிவு மாணவர்கள் பட்டாசு வீசியதாக விசாரணையில் தகவல் தெரிந்துள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மோதல், பட்டாசு வீசியது குறித்து கைதான 10 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva