1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. three admk counsilors joins in dmk

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைப்பு!

அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திடீரென திமுகவில் இணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இதில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்தநிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் வெற்றி பெற்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருவது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள்: தமிழக அரசு வெளியீடு