புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:07 IST)

அதிமுகவுக்கு தலைமையே இல்லை..!? – தேர்தல் தோல்வி பற்றி செல்லூரார்!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றாத நிலையில் அதிமுகவுக்கு தலைமையே இல்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு இடங்களிலும் பெரும் வெற்றி பெற்ற திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. அதிக வெற்றிகள் கொண்ட இரண்டாவது கட்சியாக அதிமுக உள்ளது.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்கு காரணம். ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் “திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அதிமுக திமுகவில் இணைந்துவிடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திமுக தான் அதிமுகவில் இணையும். தமிழகத்தை திமுக அல்லது அதிமுகதான் எப்போதுமே ஆட்சி செய்யும். தமிழகத்தை மற்ற கட்சிகள் ஆள முடியாது” என தெரிவித்துள்ளார்.