வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (15:34 IST)

சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் சூப்பர் ஸ்டார்!

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக அதரவாக  நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர் நாடகாவில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இதையொட்டி, இம்மா நிலத்தில்,  தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேபோல், காங்கிரஸ்  மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஜெயிக்க வேண்டுமென்று பணியாற்றி வருகின்றனர்.

தற்போது, இம்மா நிலத்தில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள  நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களைக் கவரும் வகையில் பல திட்டங்கள் வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், கன்னட சினிமாவின் பிரபல  நடிகர் சுதீப், பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இன்று  பெங்களூர் விமான  நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதீப், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும்,பாஜகவுக்கு மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகக்கூறினார்.

மேலும், இன்று கர் நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மையை நேரில் சந்தித்தார் சுதீப் இதுகுறித்து, முதல்வர் பசுவராஜ் பொம்மை, சுதீப் எந்த கட்சியையும் சாராதவர், அவர் தனக்கு ஆதரவ்வு தெவித்துள்ளது. பாஜகவை ஆதரிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்.