திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (17:46 IST)

தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள்: நடிகர் கிச்சா சுதீப்புக்கு ரசிகர்கள் வேண்டுகோள்..!

தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள் என பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீபுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 
 
கர்நாடக மாநில தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் நடிகர் கிச்சா சுதீப் இன்று தெரிவித்திருந்தார். 
 
இதனை அடுத்து அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் அரசியலுக்கு வர வேண்டாம் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரண்டாக்கிய ரசிகர்கள் உங்களிடம் இருந்து நாங்கள் நல்ல படங்களை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என்றும் தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran