ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (19:37 IST)

இந்த வீடியோ காட்சி நெஞ்சைப் பதற வைக்கிறது. -திருமாவளவன் டுவீட்

rajastan
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சாலையில் வைத்து ஜெய்ஸ்ரீராம் சொல்ல வேண்டுமென கட்டாயப்படுத்தி, அப்பாவி  பெண் ஒருவரை தாக்கும் வீடியோவை தொல். திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஒரு பகுதியில்,  ஒரு பிரதான சாலை அருகில், ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், ஒரு அப்பாவி பெண்ணை கொடுமைப்படுத்தியும், அவரை சித்ரவதை செய்தும்,  ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படியும், ஜெய்ஜனுமான் என்று சொல்லும்படியும் கூறி, ஒரு பிளாஸ்டிக்கால் தாக்கும் வீடியோ ஒன்றை தொல் திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்த வீடியோ காட்சி நெஞ்சைப் பதற வைக்கிறது. ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை இரண்டு காட்டுமிராண்டிகள் ஜெய்சிறீராம், ஜெய்ஹனுமான் சொல்லும்படி உருட்டுக் கம்பியால் தாக்குகின்றனர்.  மதவெறி எப்படி மனிதனை ஆக்குகிறது என்பதற்கு ஆர்எஸ்எஸின் உற்பத்திகளான இந்தப் பித்துக்குளிகளே சான்றாகும்.
#RSS #VCK என்று பதிவிட்டுள்ளார்.

 
Edited by Sinoj