திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:24 IST)

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு!

bore well
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்  மாநிலம் தெளசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகிலுள்ள பகுதி ஜஸ்ஸா பாடா. இங்கு வசிக்கும் அங்கிதா என்ற சிறுமி வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அருகேயிருந்த சுமார் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைகிணற்றில் தவறி விழுந்தார். இதுபற்றிதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர், சிறுமியை உன்னிப்பாக கவனித்து, அவர் 70 அடி ஆழத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர்,டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு,   ஆழ்துளை கிணற்றைச் சுற்றிலும் உள்ள மண்ணை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுமிக்கு குழாய்வழி ஆக்சிஜன் வழங்கப்பட்டு, அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.