சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (19:31 IST)

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்- ராமதாஸ் டுவீட்

தமிழகத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக  முன்னாள் பாமக தலைவர் ராமதாஸ்  டுவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசின் சசி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67 % கருணைத் தொகை என மொத்தம் 10% போனஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முன்னாள் பாமக தலைவர்  ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீப ஒளிக்கு 10% ( ரூ. 8400)  மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது! தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்கப்பட வேண்டிய ரூ.10,000 முன்பணத்தை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.

தீபஒளிக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்பணத்தை தாமதிக்காமல்  உடனடியாக வழங்க வேண்டும்! கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை  நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், இந்த ஆண்டும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj