1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thiruvannamalai engineer not affected by corona virus

”திருவண்ணாமலை பொறியாளருக்கு கொரனா வைரஸ் இல்லை”; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரனா வைரஸ்
சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த பொறியாளருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரனா வைரஸ் இல்லை, சாதாரண காய்ச்சல் தான் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரனா வைரஸால் சீனாவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இலங்கை. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இதே போல் நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சீனாவில் இருந்த வந்த திருவண்ணாமலைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான விமல், சீனாவில் இருந்து வந்தவர் தான். ஆனால் அவருக்கு கொரனா பாதிப்பு இல்லை, அவருக்கு சாதாரண சளித் தொந்தரவு தான்” என கூறியுள்ளார்.

மேலும் அப்பேட்டியில், “கிருஷ்ணகிரியில் யாருக்கும் கொரனா வைரஸ் இல்லை, தமிழகத்தில் இதுவரை யாரும் கொரனா வைரஸால் பாதிப்படையவில்லை” எனவும் கூறியுள்ளார்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
பாலிடெக்னிக் முறைகேடு : வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆலோசனை !