வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜனவரி 2020 (16:27 IST)

ஆனியன் ஊத்தாப்பம் சாப்பிட்டால் கொரோனா தாக்காதா?... எல்லை மீறி போறீங்கடா

காரைக்குடியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கொரோனா வைரஸைத் தங்கள் கடை ஆனியன் ஊத்தாப்பம் கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும் என சொல்லியுள்ளார்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய பதற்றம் அனைத்து நாடுகளிலும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் அதை வைத்து மீம்களும் விளம்பரங்களும் உருவாக ஆரம்பித்துள்ளன.

கொரோனா வைரஸ் என்றால் என்னவென்ற தெரியாத நிலையில் நிலவேம்பு கசாயம் ஒரு குழு உருட்டிக் கொண்டு இருக்க ஹோட்டல்காரர் ஒருவரோ வேற லெவலுக்கு சென்றுள்ளார்.  காரைக்குடியில் நியூ பிரசிடென்ட் என்ற ஹோட்டல் உரிமையாளர் ‘கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்" என்று எழுதி வைத்து விளம்பரம் செய்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் வைரல் ஆக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் ‘நாங்கள் 65 வருடமா இந்த தொழில் நடத்தி வருகிறோம். சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் நல்லெண்ணெய்யும் உடலுக்கு நல்லது என்பதால் விழிப்புணர்வு வரும் விதமாக இந்த விளம்பரத்தை செய்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.