வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (17:02 IST)

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

highcourt
வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாததால், அந்த தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

திருவள்ளுவர் பிறந்தநாளை வைகாசி மாதத்தில் அனுஷ நட்சத்திர தினத்தில் கொண்டாட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி.தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்தது. எனவே, அந்த தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.
 
திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தை 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறதே தவிர அது பிறந்த நாளாக அறிவிக்கப்பட வில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

 
திருவள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாக தீர்க்கமான எந்த ஆதாரங்களும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அதே சமயம் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தநாளை கொண்டாட மனுதாரருக்கு எவ்வித தடையும் இல்லை என்று தெரிவித்தது. இது தொடர்பான மனுவையும்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.