செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (14:02 IST)

கல்யாண ராணி சத்யாவுக்கு ஜாமின்.! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

பல ஆண்களை திருமணம் செய்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாணராணி சத்யாவுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த், திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் சத்யா கைது செய்யப்பட்டிருந்தார்.  காவல்துறை விசாரணையில், சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் காவல் துறையினர், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது.

இதை அடுத்து புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சத்யா ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.தனபால், இந்த வழக்கில் காவல்துறை உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி காட்டி சத்யாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.