1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (16:27 IST)

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

Chandrayan 4
ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி, சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் 'விக்ரம்' லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக  தரையிறக்கி உலக சாதனை படைத்திருந்தது. இதனையடுத்து சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது.

இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு, அங்கிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 18) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சந்திரயான் 4 திட்டத்திற்குதான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

அதேபோல் ரூ.20,193 கோடி செலவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்து. 

 
சந்திரயான்-4' திட்டத்தின் நீட்சியாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தை ரூ.1,236 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்திருக்கிறது.