ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (16:12 IST)

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!!

அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  
 
விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி குறித்து நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசி இருந்தார். இதுதொடா்பாக திருச்சி சைபா் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பிலும் சாட்டை துரைமுருகன் மீது புகார் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சாட்டை துரைமுருகன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்சி எஸ்.பி.வருண்குமார் பற்றி எந்த இடத்திலும், சமூக வலைதளங்களிலும் தவறாக பதிவிடவில்லை என்று சாட்டை முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வருண்குமாரின் சமூக வலைதள பதிவுக்கு சில நெட்டிசன்கள் அவதூறாக பதிவு பதிவு செய்துள்ளனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும்  விளக்கம் அளிக்கப்பட்டது.

 
பின்னர் காவல்துறை அதிகாரிகள் குறித்து தவறாக பதிவிட்ட நெட்டிசன்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.