1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan visited CM Jayalalithaa where admitted in that ward

கண்ணால பார்த்தா தான் நம்புவேன்: ஜெயலலிதாவை நேரில் பார்க்க சென்ற திருமா என்ன கூறினார் தெரியுமா?

கண்ணால பார்த்தா தான் நம்புவேன்: ஜெயலலிதாவை நேரில் பார்க்க சென்ற திருமா என்ன கூறினார் தெரியுமா?

ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அறிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.


 
 
முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சென்று பார்வையிட்ட பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தமிழக ஆளுநர் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதனை நம்பாததால் நானே நேரில் வந்து பார்த்தேன்.
 
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தளத்துக்கு நான் சென்றேன், அங்கு அதிமுக, மூத்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் என்னை சிறப்பாக வரவேற்றனர். முதல்வர் நலமாக இருப்பதாக என்னிடம் விளக்கி கூறினார்கள்.
 
மேலும், முதல்வர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்ற உறுதியையும் அவர்கள் எனக்கு அளித்தார்கள் என்றார். முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தீர்களா என கேட்ட போது, முதல்வரை நேரில் சந்திக்கவில்லை என கூறினார் அவர்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
மின்சார தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராகுல்காந்தி [வீடியோ]