1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (11:45 IST)

இப்போதாவது ஞானம் வந்ததே.. காயத்ரி ரகுராமுக்காக டுவிட் போட்ட திருமாவளவன்!

Thirumavalavan
பாஜகவிலிருந்து நடிகை காயத்ரி ரகுராமன் நேற்று அக்கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார் என்றும் அடுக்கடுக்காக அவர் காட்டிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சி அழைத்தாலும் நான் செல்வேன் என்றும் எனக்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பாஜக் பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம். இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக.
 
Edited by Mahendran