1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (11:30 IST)

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு!

doctor saravanan
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் திடீரென அதிமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் திடீரென பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைந்துள்ளேன். அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் இன்று சரவணன் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran