பணமதிப்பிழைப்பு வழக்கின் தீர்ப்பு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?
பணமதிப்பிழப்பு குறித்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா என பாஜக கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் இந்த தீர்ப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இதுகுறிட்த்ஹு கூறியபோது பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒவ்வொன்றும் உரிய முறையில் மேற்கொண்டதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக உறுதி செய்துள்ளது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பணமதிப்பிழப்பு திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி உள்ளிட்டோர் இனி பகிரங்க மன்னிப்பு கூறுவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Edited by Mahendran