வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (18:47 IST)

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக இருக்கலாம்: திருமாவளவன்

Thirumavalavan
பெட்ரோல் குண்டு சம்பவத்திற்கு பின்னால் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் குறித்து திமுக  கூட்டணி கட்சி தலைவர்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்புடையதல்ல என்றும் அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு பின்னால் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இருக்க வாய்ப்பிருப்பதாக தனக்கு சந்தேகம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.