1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (09:52 IST)

பெட்ரோல் குண்டு வீசிய ஒருவரை கூட கைது செய்யவில்லை: அண்ணாமலை ஆவேசம்

annamalai
திமுக எம்பி ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் பெட்ரோல் குண்டு வீசியவர்களில் ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜகவினர் பலர்  அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். அவ்வாறு விமர்சனம் செய்து வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை உள்பட பல பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பாஜக வினர் சுமார் 100 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஆனால் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.