வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (08:31 IST)

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நக்கீரன் பிரகாஷ்: நேரில் ஆறுதல் கூறிய திருமாவளவன்!

thirumavalavan
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நக்கீரன் பிரகாஷ்: நேரில் ஆறுதல் கூறிய திருமாவளவன்!
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நக்கீரன் பிரகாஷை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
கனியாமூர் பள்ளி மாணவி சிறீமதி தொடர்பான உண்மைகளைத் துணிவாக வெளிச்சப்படுத்தி வரும் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அவருடன் படம்பிடிக்கச் சென்ற அஜித் ஆகியோர் மீது பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்த வன்முறைக் கும்பல் அண்மையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. 
 
அதனால் பாதிக்கப்பட்டு  ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று பிரகாஷ் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் வீடுதிரும்ப வேண்டுமென வாழ்த்துகிறேன்.
 
கனியாமூர் பள்ளியிலிருந்து 20 கிமீக்கும் மேல் பின்னாலேயே விரட்டி வந்து தாக்கியுள்ளது அக்கும்பல். எவ்வளவு குரூரமான கொலைவெறித்தனம்?