1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified சனி, 24 செப்டம்பர் 2022 (09:26 IST)

ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.


கோவை மாநகர், மற்றும் புறநகர் பகுதியில் என மொத்தம் 5 இடங்களில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே போல கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்இந்து முன்னணி மற்றும் பாஜகவினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சிசிடிவியின் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வீச்சு சம்பவத்தால் கோவை மாவட்டம் முழுவதும்  பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இன்று இரவு கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

நேற்று முதல் கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் தொடர்ச்சியாக 6 வது நிகழ்வாக ஆனந்த கல்யான கிருஷ்ணனின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளனர்.

தகவலறிந்த குனியமுத்தூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.