1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:09 IST)

அம்பேத்கர் பிறந்தநாளை வீட்டில் இருந்தே கொண்டாடுங்கள்: திருமாவளவன்

வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளும், ஏப்ரல் 17ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்த நாளும் வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காரணத்தால் மக்கள் அனைவரும் பொதுவெளியில் இந்த பிறந்த நாளை கொண்டாட கூடாது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை புகைப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என்றும் பொதுமக்கள் இதனை கொண்டாட்டமாக கொண்டாட வேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது
 
இதனை அடுத்து ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை வீட்டிலிருந்தே சமத்துவ நாளாக கடைபிடிக்க விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளை காணொளி மூலம் சந்தித்து அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த காணொளி சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்பதால் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவிற்கு இதே முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது