திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (10:27 IST)

இந்திரா காந்தியின் பிறந்த நாள்: டிவிட்டரில் மோடி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மோடி தனது டிவிட்டர்  பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்திரா பிரியதர்ஷினி காந்தி, 1966-77 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் 1980-84 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள் ஆவார். இவர் 19 நவம்பர் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் 1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவரது 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல தலைவர்கள் தங்களது மரியாதைகளை செலுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி, டிவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.