வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:15 IST)

இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது அம்பேத்கர் காலத்தில் தொடங்கியது: திருமாவளவன்

இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது அம்பேத்கர் காலத்தில் தொடங்கியது என்றும், தமிழ்நாட்டில் பெரியார் காலத்தில் தொடங்கியது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
 
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய கருத்தரங்கில் விசிக தலைவர் திருமாவளவன் மேலும் கூறியதாவது:
 
பிரெஞ்சு புரட்சியின் போது எழுப்பப்பட்ட நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய 4 முழக்கங்கள் முக்கியமானவை. இந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு வகையான ஆட்சி நிர்வாகம் இருந்தது, எல்லா சமஸ்தானங்களிலும் சாதிய நிலை ஒன்றாகத்தான் இருந்தது;
 
சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எந்த ஆட்சியாளரும் கருதவில்லை, ஆங்கிலேயரின் அரசாங்கத்தில் தான் சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்பட்டது
 
Edited by Mahendran