வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (20:15 IST)

எளியோருக்கு எதிரான வன்மம் இது- தொல். திருமாவளவன்

காலை உணவு திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி தினமலரில் இன்று வெளியான நிலையில் இதற்கு தொல். திருமாவளவன் எம்பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  உள்ள அரசுப் பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து, இது அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தினமலரின் ஈரோடு, சேலம்   பதிப்பில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி விசிக தலைவர் தன் சமூக வலைதள பக்கத்தில், ’’எளியோரின் பிள்ளைகள் இருவேளை உணவு உண்பதையும் ஏற்கமனமில்லா எத்திப் பிழைக்கும் கும்பல்.

உடல் உள்ளம் யாவும்
சனாதன நஞ்சில்
ஊறிக் கொழுத்த
சாதிஆதிக்கத் திமிர்.

கடைநிலையில் உழலுவோர் கடைத்தேறக் கூடாதென காலமெல்லாம் சதிசெய்த கழிசடைகளின் கழிவுப்புத்தி. இது திமுக அரசின் திட்டத்துக்கு எதிரான  காழ்ப்பு மட்டுமல்ல; எளியோருக்கு எதிரான வன்மம்.

இவர்களைக் கண்டிப்பது மட்டுமல்ல; சட்டப்படி தண்டிக்கவும் வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.