"துக்ளக் ஆசிரியரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சிக்கு... திருமாவளவன் கண்டனம் !

thuglak
sinoj kiyan| Last Modified திங்கள், 27 ஜனவரி 2020 (13:38 IST)
துக்ளக் ஆசிரியரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச நடந்த முயற்சிக்கு விடுதாஇ சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக துக்ளக் பெயர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் உள்பட பல சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த் பேசியது மட்டும் சர்ச்சைக்குள்ளாகியது. பெரியார் குறித்து அவர் அவமரியாதையாக பேசி விட்டதாகவும் எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியார் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த செயலுக்கு திருமாவளவன் எம்.பி, கண்டம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, மூன்று இரண்டு சக்கர வாகனங்களில் 6 மர்ம நபர்கள் வந்ததாகவும் அவர்கள் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பகுதியில் காவல்துறையினர் வந்ததாகவும் இதனை அடுத்து குண்டுவீசும் முயற்சியை கைவிட்டு விட்டு அந்த 6 பேரும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியுள்ளதாவது :
 
துக்ளக் ஆசிரியரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது,  கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :