1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (21:02 IST)

இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் - திருமாவளவன்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இடது சாரி சிந்தனை கொண்டவர்களின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது :
 
டெல்லியில் இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே  ஜாமியா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய கும்பல்தான் ஜேஎன்யு-விலும் தாக்குதல் நடத்தியுள்ளது என எம்.பி திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.