1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (10:52 IST)

இவங்க தயவு இல்லாம பிழைக்க முடியாதுப்பா... சீமானுக்கு திருமா அட்வைஸ்?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். 
 
சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட திருமாவளவன் பின்வருமாறு பேசினார். தமிழ் தேசிய கோட்பாட்டில் எந்த விதமான மாறுபாடும் இருக்காது. ஆனால் அதை அடையும் வழியில் தான் மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றது. தமிழ் மகன் தான் தமிழ நிலத்தை ஆளவேண்டும், தமிழர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் மாற்று கருத்தில்லை. 
ஆனால், வாங்கு வங்கி அரசியலில் எப்படிப்பட்ட நிலையில் நாம் இருக்கிறோம், திமுகவையும் அல்லது அதிமுகவையும் தூக்கி எறியும் சக்தி நமக்கு இருக்கின்றதா என யோசிக்க வேண்டும் என பேசியுள்ளார். 
 
திருமவளவனின் இந்த பேச்சு உள்ளாட்சி தேர்தலில் கடும் சறுக்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக கூறியது போல இருந்ததாக பலர் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.