1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (18:18 IST)

திருமாவளவனும், கி.வீரமணியும் பண்பாடு குறித்து பேசுவதா? எச்.ராஜா

துக்ளக் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அந்த விவகாரம் ஊடகங்களில் சூடுபிடித்து பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இதை ஒரு வேளை ரஜினிகாந்த் எதிர்பார்த்தோ என்னவோ, எந்த விமர்சனத்துக்கும் பதிலளிக்காத ரஜினிகாந்த் இதுகுறித்த விமர்சனங்களுக்கு இன்று காலை பதிலளித்துள்ளார். மேலும் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறியதும் சமூக வலைதளங்களில் டிரண்டாகவும், ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் வெளியாகி வருகிறது.
 
இந்த நிலையில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியது பண்பாடு நாகரீகம் இல்லாதது என்றும் அவர் மன்னிப்பு கேட்பதுதான் சிறந்தது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் கருத்து கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த இருவரது கருத்துக்கு பாஜக தேசியச் எச்ச ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவனும், சமீபத்தில் கிருஷ்ண பரமாத்மாவையும் பகவத்கீதையையும் இழிவாகப் பேசி திருச்சியில் எதிர்வினையை நேரில் சந்தித்த கி.வீரமணியும் பண்பாடு நாகரிகம் குறித்து பேசுவது விநோதமாக உள்ளது. இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதோ. என்று பதிவு செய்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது