1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (19:07 IST)

அதிமுக-வின் தோல்விக்கு காரணம் என்ன? திருமா கணிப்பு!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவுதந்ததால் அதிமுகவினால் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.     
 
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுகவின் தோல்விக்கான காரணம் என்னவாக இருக்கும் என கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவுதந்ததால் அதிமுகவினால் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தந்ததால் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என கூறியுள்ளார். 
 
இதற்கு முன்னர், அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா, குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் தான் சிறுபான்மையினர் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. ஆதலால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன் என  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.