ஏற்கனவே ஏகப்பட்ட குளறுபடி; இப்போ ரிமோட் வோட்டிங் மெஷினா? – திருமாவளவன்!
புலம்பெயர் தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக ரிமோட் வோட்டிங் மெஷின் பயன்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதற்கு விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் எலக்ட்ரானிக் மெஷினை பயன்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் தேர்தல்களில் வாக்களிக்கும் மக்களின் சதவீதம் சில பகுதிகளில் குறைந்து வருகிறது. வேலைக்காக பலர் வெளிமாநிலங்களுக்கு புலம் பெயர்வதால் தேர்தல் சமயத்தில் வாக்களிக்க அவர்கள் வருவதில்லை என கூறப்படுகிறது.
எனவே புலம்பெயர் மக்களும் வாக்களிக்கும் விதமாக அடுத்து வரும் தேர்தல்களில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்குகளை குறிவைத்தே இந்த மெஷின் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே உள்ள ஈவிஎம் மெஷின்களால் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் உள்ள நிலையில், ரிமோட் வோட்டிங் மெஷினை அறிமுகம் செய்வது இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும். எனவே இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K