1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan says about duraimurugan speech

பாஜக வளர்கிறதா? துரைமுருகன் கருத்துக்கு திருமாவளவன் விளக்கம்!

Thirumavalavan
தமிழகத்தில் பாஜக அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பாஜக அசுரத்தனமான வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் இதுவரை நமக்கு எதிர்க் கட்சியாக அதிமுக மட்டுமே இருந்தது என்றும் இனிமேல் பாரதிய ஜனதாவின் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்
 
அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக கூறியிருப்பார் என்றும், அவர் ஒரு நல்ல நகைச்சுவை பேச்சாளர் என்பதால் இதனை அவருடைய நகைச்சுவை பேச்சாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ட்விட்டருக்கு திரும்பி வர மாட்டேன்: டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!