1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (11:45 IST)

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: 2025 பிப்ரவரியில் பதவியேற்பு!

Election Commission
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அருண் கோயல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2025ஆன் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுகிறார். இவர் ஓய்வு பெற்ற பின்னர் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அவர் 2027ச்ச்ம்  ஆண்டு டிசம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார் என்றும் அதன் பிறகு ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் கோயல் மத்திய அரசு செயலாளராக பணிபுரிந்து உள்ளார் என்பதும் அதன்பின் மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva