புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated: திங்கள், 28 நவம்பர் 2022 (11:34 IST)

பாஜக தமிழகத்தில் 2வது இடத்திற்கு வர முயற்சிக்கின்றது: திருமாவளவன்

thirumavalavan
தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக இரண்டாவது இடத்திற்கு வர முயற்சிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இது குறித்து கூறிய போது தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்றும் இங்கே சனாதனத்திற்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
 
மேலும் திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து வலுவாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் கட்சிகள் இல்லை என்றும் அது தேர்தலுடன் கலைந்து விட்டது என்றும் இதனை பயன்படுத்திக் கொண்டு பாஜக அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்துக்கு வர முயற்சிக்கிறது என்றும் கூறினார்
 
Edited by Mahendran