விசிகவின் 2 வேட்பாளர்கள் யார் யார்? ரவிகுமார் எம்பி தகவல்..!
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்ற தகவலை ரவிக்குமார் எம்பி சற்றுமுன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகள் வரை கேட்ட நிலையில் அதன் பிறகு மூன்று தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என்றும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
ஆனால் திமுக ஏற்கனவே விடுதலை சிறுத்தை கட்சிக்கு கடந்த முறை அளிக்கப்பட்ட இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று திமுக உறுதி செய்தது என்பதையும், அதற்கு திருமாவளவன் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் போட்டியிட இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் மீண்டும் திருமாவளவன் போட்டியிடுவார் என்றும் விழுப்புரத்தில் நான் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran