1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (22:39 IST)

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் - ABP - CVoter கருத்துகணிப்பில் தகவல்

விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட தேசிய கட்சிகளும்,  திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி,  உள்ளிட்ட பல்வேறு  மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இன்னும் சில நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில்,  தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில், ஆளுங்கட்சியான திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸுக்கு 10  தொகுதிகளும், மதிமுக, விசிக, கொநாமதேக, இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை   ஒதுக்கீடு செய்து இதற்கான  ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணிவே வெல்லும் என ABO-CVoter நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 
55சதவீதம் வாக்குகளுடன் திமுக கூட்டணி முதலிடத்திலும், 28 சதவீதம் வாக்குகளுடன் அதிமுக 2 வது இடத்திலும், 11 சதவீதம் வாக்குகளுடன் பாஜக மூன்றாவது இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.