1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (15:57 IST)

7 தமிழர்கள் விடுதலைக்கு இதை செய்யுங்கள்: முதல்வருக்கு திருமாவளவன் யோசனை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார்
 
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு நேற்று தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்திற்கு தக்க பதில் கிடைக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது
 
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு ஆலோசனை ஒன்றே கூறியுள்ளார். 7 தமிழர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்றும் எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். திருமாவளவனின் ஆலோசனையை முதல்வர் முக ஸ்டாலின் செயல்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்