1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 மே 2021 (20:53 IST)

சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கேரள முதல்வருக்கு வாழ்த்துக்கள்: திருமாவளவன்

சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கேரள முதல்வருக்கு எனது நன்றிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்
 
கேரள முதல்வராக இன்று பினரயி விஜயன் அவர்கள் மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருடன் அவருடைய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் பினரயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் 
குறிப்பாக பினரயி விஜயன் அமைச்சரவையில் தேவசம்போர்டு அமைச்சராக ஒரு தலித் ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து அனைவரும் பாராட்டும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் முதல் கேரள முதல்வருக்கு தெரிவித்த அவர் கூறியிருப்பதாவது:
 
தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரள முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு #பினாராயி_விஜயன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஆதிக்குடியினம் சார்ந்த ஒருவரை #தேவசம்_போர்டு  அமைச்சராக்கிச் சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்து சாதித்திருப்பவர். #வெல்க_மார்க்சியம்.