1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (09:13 IST)

இன்று பள்ளி செல்லக்கூடிய மாணவர்கள் செய்யக்கூடாதவை என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று  1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

 
இதனிடையே 600 நாட்களுக்கு பின்னர் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சில நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு... 
 
1. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதனால் முதல் நாள் வரக்கூடிய மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. 
2. பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்பது கட்டாயமில்லை. மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம். 
3. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும்.
4. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
5. பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும்.
6. பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்த கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். 
7. மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
8. பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பயன்படுத்த வேண்டும். 
9. மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.