1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Due to Heavy rain 6 districts schools holiday

6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை
தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில நாட்கள் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்க இருக்கும் நிலையில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருவாரூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருவதால் மேலும் விடுமுறை குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 
அடுத்த கட்டுரையில்
24.74 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!